அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட யோசனை! வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார் ட்ரம்ப்
அமெரிக்க காங்கிரஸ் இந்த மாதம் நிறைவேற்றிய 740 பில்லியன் டொலர் பாதுகாப்பு செலவு யோசனைக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஐரோப்பாவிலிருந்து துருப்புக்கள் திரும்பப் பெறுவதைக் கட்டுப்படுத்துவதற்கும், இராணுவத் தலைவர்களின் பெயர்களை இராணுவத் தளங்களிலிருந்து அகற்றுவதற்கும் இந்த யோசனையில் விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் காங்கிரஸால் நிறைவேற்றப்பட்ட யோசனை சட்டமாவதற்கு ஜனாதிபதியின் கையொப்பம் அவசியமாகும்.
சில கொள்கை கருத்து வேறுபாடுகள் காரணமாக, அரிதான சந்தர்ப்பங்களில், ஜனாதிபதி தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை நிராகரிக்கலாம்.
எனினும் சட்டமியற்றுபவர்கள் ஜனாதிபதி வீட்டோவை மீறி, காங்கிரசின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் அமர்வுகளிலும் மூன்றில் இரண்டு வாக்குகளை பெறுவதன் மூலம் சட்டத்தை அமுல்செய்யமுடியும்.