அமெரிக்காவின் ஒருதலைபட்ச நகர்வு! அவசர ஆலோசனையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள்
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நட்பு நாடுகள் மீது இறக்குமதி வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டலை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குப் புதிய வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.
முதற்கட்டமாக எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பின்னர் அது 25 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிக அவசியம் என்று வாதிடும் ட்ரம்ப், தேவையேற்பட்டால் அதனைப் பலவந்தமாக கைப்பற்றுவதையும் நிராகரிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இந்தநிலையில், ட்ரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது: அதற்கமைய, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ட்ரம்ப்பின் இந்த மிரட்டல் "முற்றிலும் தவறானது" எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், இதனை "ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அமெரிக்காவின் ஒருதலைபட்ச நகர்வு
டென்மார்க் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பிற ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான நகர்வுக்கு எதிராகத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
இந்த வரி மிரட்டலால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பாதிப்புகள் மற்றும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போக்கினை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் இன்று கூடுகின்றனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri