ஹரிஸுடனான விவாதத்தின் எதிரொலி: ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி முடிவு
அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹரிஸ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற விவாதத்திற்கு பின்னர், இனிமேல் விவாதத்தில் கலந்துகொள்வதில்லை என ட்ரம்ப் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலடெல்பியாவில் இடம்பெற்ற விவாதத்திற்கு பின்னர் அமெரிக்காவின் வாக்காளர்களுக்காக மற்றுமொரு விவாதத்தை வழங்கவேண்டும் என கமலா ஹரிஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
எனினும், ட்ரம்ப் தரப்பு இதனை மறுத்துள்ளது.
விவாதத்திற்கு பின்னர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹரிஸ் தரப்பினர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமர்சனங்கள்
தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை செலுத்தக் கூடிய விடயங்களான அமெரிக்க - மெக்சிக்கோ எல்லை விவகாரம் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக ட்ரம்ப்பின் பிரசாரம் அமைந்துள்ளது.
மேலும், கமலா ஹரிஸ் ஒரு பொய்யர் எனவும் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்து வருகின்றார்.
இதேவேளை, ட்ரம்ப் மீதான பிரதான விமர்சனமாக கருக்கலைப்பு தடை விவகாரத்தை ஹரிஸ் தரப்பு முன்வைத்து வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
