புடின் மீது கடும் கோபத்தில் ட்ரம்ப்.. நட்பு பாராட்டும் ரஷ்யா
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், விளாடிமிர் புடின் மீது கடும் கோபமாக இருப்பதாகக் கூறிய பிறகும், ரஷ்யா இன்னும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது கோபத்தில் இருப்பதாக தெரிவித்து அவரை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதன்போது, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் நம்பகத்தன்மையைத் தாக்கியதற்காக புடின் மீது கோபமாக இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.
50வீத வரி
மேலும், போர் நிறுத்தத்திற்கு புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால் ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 50வீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார்.
இதனை தொடர்ந்து, இந்த விடயங்களைச் சரிசெய்யும் முயற்சியை ரஷ்யா எடுத்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் இணைந்தே செயற்படுவதாக தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வாரம் புடினுக்கும் ட்ரம்பிற்கும் இடையே ஒரு தொலைபேசி அழைப்புக்கான திட்டம் எதுவும் இல்லை என்றும், ஆனால் தேவைப்பட்டால் புடின் அதற்குத் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அரசியல் தரப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் பல வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன்போது ட்ரம்ப், புடினை விட பெரும்பாலும் ஜெலென்ஸ்கியை விமர்சித்தார். ஆனால், வெள்ளிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி, ஐ.நா.வின் ஆதரவின் கீழ் உக்ரைனில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை மாற்றக்கூடிய ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை முன்வைத்தபோது, புடின் மீதான ட்ரம்பின் கோபம் தூண்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
