இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் வழங்கியுள்ள வாக்குறுதி
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெரிய வர்த்தக வாக்குறுதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை புரிந்துகொண்டதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களை அவர் முன்னதாக பாராட்டியிருந்தார்.
அத்துடன் இரு நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
வர்த்தக உறவு
அதேநேரம் காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை வழங்கும் விடயத்திலும் இணைந்து செயற்படுவதற்கு அவர் முன்வந்துள்ளார்.
இன்னும் ஆலோசிக்கப்படவில்லை என்றாலும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்று பார்க்க, புதுடில்லி மற்றும் இஸ்லாமாபாத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
