ட்ரம்பிடம் ஈரான் அவசர கோரிக்கை.. வளைகுடா போரில் அதிரடி திருப்பம் - சற்று முன் வெளியான பரபரப்பு பதிவு!
ஈரானின் புதிய தலைவர், அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர், ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் சற்றுமுன்னர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், அவர் அந்த உயர் அதிகாரியின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் அந்த நபர் அதிக புத்திசாலியாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கற்காலத்திற்கு அனுப்புவோம்!
"தனது முன்னோடிகளை விட மிகவும் தீவிரமயமற்றவராகவும், மிகுந்த புத்திசாலியாகவும் விளங்கும் ஈரானின் புதிய ஆட்சி ஜனாதிபதி (Iran’s New Regime President), அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை திறந்த, தடையற்ற மற்றும் தெளிவான நிலையில் இருக்கும்போது நாங்கள் பரிசீலிப்போம்.
அதுவரை, நாங்கள் ஈரானை முற்றிலுமாக அழிப்போம் அல்லது, அவர்கள் சொல்வது போல், கற்காலத்திற்குத் திருப்பி அனுப்புவோம்!” என பதிவிட்டுள்ளார்.