இஸ்ரேல் இனி லெபனான் மீது குண்டுவீசாது..! இஸ்ரேலுக்கு கட்டுபாடு விதித்த ட்ரம்ப்
லெபனானில் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இஸ்ரேல் இனி லெபனான் மீது குண்டுவீசாது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதனை அவருடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு கட்டுபாடு விதித்த ட்ரம்ப்
மேலும், நமது மாபெரும் B2 குண்டுவீச்சு விமானங்களால் உருவாக்கப்பட்ட அணுத்தூள் அனைத்தும் அமெரிக்காவிற்கே வழங்கப்படும்.
எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் பணம் கைமாறாது. இந்த ஒப்பந்தம் லெபனானுக்கு எந்த வகையிலும் கட்டுப்பட்டதல்ல, ஆனால் அமெரிக்கா தனியாக லெபனானுடன் இணைந்து செயல்பட்டு, ஹிஸ்புல்லா நிலைமையை உரிய முறையில் கையாளும்.
இஸ்ரேல் இனி லெபனான் மீது குண்டுவீசாது. அவ்வாறு செய்வதிலிருந்து அமெரிக்கா அவர்களைத் தடை செய்துள்ளது. போதும், இதுவே போதும்!!! நன்றி” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எந்தவொரு தற்காலிக போர் நிறுத்தத்தையும் தெஹ்ரான் நிராகரிப்பதாகவும், பிராந்தியம் முழுவதும் போருக்கு ஒரு முழுமையான முடிவைக் காண விரும்புவதாகவும் ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
you may like this