டொனால்ட் டிரம்ப் தொடர்பில் அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளிற்கு குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுபாட்டுரிமை உள்ளது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு தொடர்பான முக்கிய அதிகாரங்கள் தொடர்பில் விடுபாட்டுரிமை உள்ளது என அமெரிக்க உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கட்சிகளின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆறு கன்சவேர்ட்டிவ் நீதிபதிகள் விடுபாட்டுரிமையுள்ளது என தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட ரீதியில் எடுத்த நடவடிக்கைகள்
எனினும் முன்னாள் ஜனாதிபதிகள் தனிப்பட்ட ரீதியில் எடுத்த நடவடிக்கைகளிற்கு வழக்கு தொடர்வதில் எந்த விடுபாட்டுரிமையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் தலையீடு செய்த வழக்கிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து இந்த வழக்கு கீழ்நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளது, அந்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து தீர்மானிக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
