"Praise be to Allah" - சற்று முன்னர் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவு.. ஈரானுக்கு மிக மோசமான வார்த்தைகளால் எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் ஈரானுக்கு மிகவும் கடுமையான மற்றும் மிக மோசமான வார்த்தைகள் கலந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்குமாறு ஈரானுக்கு அவர் விடுத்துள்ள இந்தக் கட்டளை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் போர் ஆரம்பித்தது முதல், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் திறக்க வேண்டும் என ஈரான் அரசுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் வழங்கியிருந்த காலக்கெடு எதிர்வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைகிறது.
கடுமையான வார்த்தை பிரயோகம்
இந்நிலையில், ஈரான் இதற்குப் பணியாததால் ஆத்திரமடைந்த அவர், ஈரானின் சிவில் கட்டமைப்புக்களை இலக்கு வைப்பதாக பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவரின் பதிவில், மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை நோக்கி "அறிவற்றவர்களே" எனச் சாடியுள்ளார்.
மேலும், "செவ்வாய்க்கிழமை ஈரானில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களுக்கு ஆபத்தான நாளாக இருக்கும். இதுவரையில்லாத அளவுக்கு ஒரு பேரழிவை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள்.
ஹோர்முஸை திறக்காவிட்டால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும், பொறுத்திருந்து பாருங்கள்" என எச்சரித்துள்ளார்.
அத்துடன், தனது ஆக்ரோஷமான எச்சரிக்கைப் பதிவின் இறுதியில் "Praise be to Allah" என்ற வாசகத்தையும் அவர் இணைத்துள்ளார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.
இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றன..! சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் விமானங்கள் - ஈரான் வெளியிட்ட அறிவிப்பு
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri