திருகோணமலை - உப்புவெளி பேருந்து டிப்போ முகாமையாளரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் (Video)
திருகோணமலை - உப்புவெளி பேருந்து டிப்போ முகாமையாளரை இடமாற்றக் கோரி பேருந்து டிப்போ ஊழியர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (07.03.2023) நடைபெற்றுள்ளது.
பேருந்து டிப்போவின் முன்றலில் வாயிற் கதவினை பூட்டி நடைபெற்றுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தகுதியான முகாமையாளர்
தற்போது முகாமையாளரை நீக்கித் தகுதியான முகாமையாளரை நியமித்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தகுதியான முகாமையாளரை நியமித்துத்து தா, சாரதி காப்பாளர் பிரச்சினையை முடித்து விடு, சாரதிகளின் இடமாற்றத்தை இரத்துச் செய், போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தியிருந்தார்கள்.
திருகோணமலை பேருந்து டிப்போவிலிருந்து எந்தப் பேருந்துகளும் இன்றைய தினம் பணியில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.










