புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் பரபரப்பான கருத்துக்களை முன்வைக்கும் கஸ்ஸப தேரர் !
கொழும்பு மற்றும் இதர பிரதேசங்கள் ஜனாதிபதி அநுரவின் ஆளுகைக்குள் இருந்தாலும் கிழக்கு மாகாணம் புலம்பெயர் தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. கிழக்கிலுள்ள அரச நிறுவனங்கள் புலம் பெயர் தமிழர்கள் வழங்கும் பணத்திற்கு கட்டுப்பட்டுள்ளதாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்கள்:
அமைச்சர் வட்டகல எனக்கு நேரடியாக கதைக்கவில்லை
திருகோணமலை புத்தர் சிலை சம்பவத்திற்கு பின்னர் கிழக்கு மாகாண பௌத்த பிக்கு முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக நான் செயற்படுகிறேன்.
கடந்த காலத்தில் இருந்து கிழக்கு மகாணத்தில் உள்ள சிங்கள மக்களை விரட்டியடிக்கும் சதித் திட்டம் தீட்டப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. கிழக்கு மாகாண பௌத்த பிக்குகள் அங்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் என்னை அழைப்பது வழமையாகும்.
அவ்வாறு வந்த அழைப்பையடுத்தே சென்றேன். கிழக்கு மாகாணத்திலுள்ள பல விகாரைகளை நடத்துவதற்கு வருமானம் இல்லை.அவ்வாறான ஒரு நிலையிலேயே 'ஜுஸ் பார்' அமைக்கப்பட்டது.
ஆனால் விகாரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்கோணேஸ்வர கோவிலுக்கு செல்லும் வழியில் நிறைய வியாபார நிலையங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
அப்போ ஏன் விகாரைக்கு மட்டும் செய்ய முடியாது. நாமல் ராஜபக்ச எனக்கு இது வரை ஒரு தொலைபேசி அழைப்பு கூட எடுத்ததில்லை.பின்னர் எதற்கு நாமலுக்காக நான் அரசியல் செய்ய வேண்டியதில்லையே.

இவை அனைத்தும் கட்டுக் கதைகளாகும். வட்டகல என்ன கூறுகிறார்,நான் என்ன கூறுகிறேன் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த பிரச்சினையில் நான் தனியாக சம்பந்தப்படவில்லை.வட்டகல எனக்கு கதைக்கவில்லை.
எங்கள் குழுவுக்கு மூன்றாம் தரப்பின் ஊடாகவே தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டது. இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள். நாங்கள் வேறு இடத்தில் காணி தருகிறோம் என்றனர். நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம் என்று குறிப்பிட்டார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam