திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்
திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.ஸ்ரீபதி (காணி) அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சிறுவர்கள் மற்றும் மகளிருடன் தொடர்புடைய துறைசார் தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
முக்கிய தீரமானங்கள்
பிரதேச மட்டத்தில் இனங்காணப்பட்டு கலந்துரையாடப்பட்டு, தீர்வு காணப்படாத நிலையில் மாவட்ட மட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக, சிறுவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, உரிமைகள், உளசமூக நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்கான பல்வேறு தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.





காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 15 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam