தம்பலகாமம் பிரதேசசபை அமர்வில் அமரத்துவம் அடைந்த சிவாஜிலிங்கத்துக்கு அஞ்சலி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு தம்பலகாமம் பிரதேசசபை அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பிரதேசசபை அமர்வு இன்றைய தினம் (18.11.2026) இடம்பெற்ற போதே இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது தம்பலகாமம் பிரதேசசபை தவிசாளர் எச்.தாலிப் அலி மற்றும் உபதவிசாளர் வி.விஜயகுமார், உறுப்பினர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சிவாஜிலிங்கம் தொடர்பில் உரை
அமரத்துவம் அடைந்த சிவாஜிலிங்கம் தொடர்பில் இதன்போது உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியதுடன் அவரின் கடந்த கால நினைவுகள் தொடர்பில் உப தவிசாளர் உரை ஒன்றையும் இதன் போது நிகழ்த்தினார்.
குறித்த சபை அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றனர்.
