தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆறாம் நாளில் புதுக்குடியிருப்பில் அஞ்சலி
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று அழிக்கப்பட்டதன் நினைவாக தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம் வருடம்தோறும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த காலப்பகுதியில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்ற பல்வேறு பகுதிகளிலும் தமிழின படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தில் உடைய ஆறாம் நாள் நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றிருந்தது.
இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் படுகொலை செயப்பட்ட பொது
மக்களுக்கு சமூக செயற்பாட்டாளரான பீற்றர் இளஞ்செழியன் பொதுச் சுடர் ஏற்றி
அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri