விடுதலையான அரசியல்வாதிகளுக்கு விசாரணை! அருண் ஹேமச்சந்திரா திட்டவட்டம்
கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர், கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் பழிவாங்கள்
“நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை இதற்கு முதலிலே அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட வரலாறு இருக்கின்றது.
1950 ,60,70,80, 90, க்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் இப்படிப்பட்ட பல்வேறு விடயங்கள் நாட்டிலே நடந்திருக்கின்றது.
1977 ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு விடுமுறையை வழங்கி மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் சிறுபான்மைக்கும் எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது.
அப்படிப்பட்ட நாட்டிலே நாங்கள் வாழுகின்றோம். எனவே நாங்கள் பழிவாங்கும் செயற்பாடுகளுடன் செயற்பட்டிருந்தோம் என்றால் எவ்வளவோ வேலையை செய்திருக்கலாம்.
ஆனால் நாங்கள் சட்டரீதியாக ஒப்புவிக்கப்படுவதன் பிரகாரம் நாங்கள் அவர்களுக்கு எதிராக சரியான முறையில் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |