கிளிநொச்சியில் இடம்பெற்ற மரம் நடுகை நிகழ்வு மற்றும் பயிர்ச்சிகிச்சை முகாம்
பயனுறுதி மிக்க நிலப்பயன்பாட்டின் ஊடாக நலம் நிறைந்த நாடு என்ற தொனிப்பொருளில்
மே மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 5ஆம் திகதி வரை சுற்றுசூழல் வாரம்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (31) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் மரம் நடுகை முன்னெடுக்கப்பட்டது.
நோய் நிலைமை
குறித்த நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் மகேஸ் ரல்தொட்ட, பாடசாலையின் அதிபர் சவரி பூலோகராஜா ,பிரதி அதிபர், ஆசிரியர்கள், வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கிளிநொச்சி பிரதி மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் விவசாயிகளின் நலன் கருதி பயிர்ச்சிகிச்சை முகாம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்ச்செய்கையின் போது எதிர்கொள்ளும் நோய்த்தாக்கத்தை குறைக்கும் நோக்கில் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் பயிர்ச்சிகிச்சை முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாதத்தில் இரண்டாவது வாரத்தின் செவ்வாய்க்கிழமையும் அதே மாதத்தில் இறுதி வாரத்தின் வெள்ளிக்கிழமையும் குறித்த பயிர்சிகிச்சை முகாம் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாய திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதில் விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கையின் போது பயிர்களின் நோய் நிலைமைகளை
நேரடியாக காண்பித்து கட்டுப்படுத்தல் முறைகளை பெற்றுக்கொள்ளவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.