கம்பஹாவில் இன்றும் தொடர்ந்த புதையல் தேடும் பணிகள்
கம்பஹா - வெயாங்கொடை வந்துரம்ப பகுதியில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பகுதிக்கு அருகில் புதைந்துள்ளதாக கூறப்படும் புதையல் தேடும் பணி இன்று (23.11.2024) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.
இதன்போது, அகழ்வுப்பணியாளர்கள் பாரிய பாறையை எதிர்கொண்டனர். எனினும், பாரிய இயந்திரம் மூலம் பாறையைத் தூக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
எனவே, நாளையும் இதற்கான முயற்சிகள் தொடரவுள்ளன. புதையல் மறைந்திருப்பதாக நீண்டகாலமாக ஊகிக்கப்பட்டதை வெளிக்கொணரும் நோக்கத்துடன், அத்தனகல்லை நீதவான் நீதிமன்றத்தின் நீதிமன்ற உத்தரவின் பேரில் நவம்பர் 21 ஆம் திகதி இந்த அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
புவியியல் ஆய்வு
பல ஆண்டுகளாக, புதையல் வேட்டையாடுபவர்களின் முக்கிய இடமாக இந்த தளம் இருந்து வருகிறது. தொல்பொருள் திணைக்களம், இந்த இடத்தில் புதையல் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளபோதும், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர், நிலத்தடியில் ஏதோ புதைக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்தே, தொல்பொருள் திணைக்களம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், வெயாங்கொட பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மீரிகம பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் தற்போது அகழ்வு மேற்கொள்ளப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |