ஜனாதிபதியுடன் கோவிட் பணிக்குழுவின் முக்கிய சந்திப்பு ஒத்திவைப்பு - வெளியாகியுள்ள தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கோவிட் பணிக்குழு இன்றைய தினம் காலை மேற்கொள்ளவிருந்த சந்திப்பானது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் குறித்த சந்திப்பானது பிற்பகல் வேளையில் நடக்கக்கூடும் எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்றானது அபாய நிலையை நோக்கி செல்வதாக பல தரப்பினரும் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று காலை மேற்கொள்ளப்படவிருந்த குறித்த சந்திப்பில் அரசாங்கத்தால் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த சந்திப்பு இடம்பெற்றாலும் கூட கோவிட் தொற்று அச்சம் காரணமாக பலர் இதில் பங்கு கொள்ளும் சாத்தியம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.



