நாட்டில் கடுமையாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு - பொதுப்போக்குவரத்து குறித்து வெளியான தகவல்
வழமை போன்று போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கும் எனவும், பொதுப் போக்குவரத்து தொடர்பில் எவ்வித விசேட கட்டுப்பாடுகளையும் சுகாதாரத்துறையினர் இதுவரையில் விதிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையில் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் பொதுப்போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் தற்போது நிலவும் கோவிட் தொற்று அச்சுறுத்தல் நிலைமையில் பொதுப்போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாணங்களைக் கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே பொதுப்போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் தனியார் துறை பேருந்துகள் சேவையை முன்னெடுத்து வருகின்றன.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் 40 வீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகளைப் பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளதுடன், குறித்த ஆவணங்களை எந்த நேரத்திலும் பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
