உலக நீதிக்கான அமைப்பின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள நெதர்லாந்து பயணமாகவுள்ள வீ.குகதாசன்

Ministry of Education Batticaloa Eastern University of Sri Lanka Sri Lanka
By Siva Thileep May 20, 2022 10:40 AM GMT
Report

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தராகவும், மட்டக்களப்பு சனசமூக மத்தியஸ்த சபையின் பிரதி தவிசாளராகவும் கடமையாற்றும் வீரச்சந்திரன் குகதாசன் உலக நீதிக்கான அமைப்பின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நெதர்லாந்தில் உள்ள திஹேக் நகரத்திற்கு பயணமாகவுள்ளார்.

நீதியமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் மத்தியஸ்த சபை தவிசாளர்கள், சிரேஸ்ட மத்தியஸ்தர்களுக்கென கோரப்பட்டிருந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதியை அணுகுதல், ஊழல் எதிர்ப்பு, சமவுரிமை, பாரபட்சமின்மை, போன்ற நீதிசார் விடயங்களில் உலகளாவிய ரீதியில் சட்டவாட்சியை ஸ்திரப்படுத்த கொள்கை அளவில் உதவும் அமைப்பான உலக நீதிக்கான அமைப்பின் ஒருங்கிணைப்புடன் பிரிட்டிஸ் கௌன்சில், செடார் அமைப்பின் அனுசரணையுடன் கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை, அளிக்கையின் அடிப்படையில் 116 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

உலக நீதிக்கான அமைப்பின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள நெதர்லாந்து பயணமாகவுள்ள வீ.குகதாசன் | Travel Netherlands Attend International Conference

இம்மாநாடு எதிர்வரும் 29.05.2022 தொடக்கம் 03.06.2022 வரையில் நெதர்லாந்தில் உள்ள திஹேக் நகரில் இடம்பெறவுள்ளது. இவ்வாறு இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் 08 பேரில் சிரேஸ்ட மத்தியஸ்தர்களில் ஒருவரான வீ.குகதாசன் மாத்திரமே தமிழராவார்.

சனசமூக மத்தியஸ்த சபையின் வினைத்திறன் சார் அனுபவப் பகிர்வையும், அதனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் தனக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தில் உரையாற்றவுள்ளார் என்பதுடன், இது இலங்கை நாட்டுக்கு பெருமை சேரத்துள்ள ஒரு விடயமுமாகும்.

இவர் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் சிறப்பு பட்டதாரியும், சிறுவர் பாதுகாப்பு, உளவளத்துணை மற்றும், ஆங்கிலம், கணணி போன்ற துறைகளில் துறைசார் டிப்ளோமா கற்கை நெறிகளையும், தொழில்வாண்மைசார் பயிற்சிகளையும் பெற்றவர் என்பதுடன் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சின் சிறுவர பாதுகாப்பு, சிறுவர் அபிருத்திப் பரப்பில் சிரேஸ்ட முதுநிலை வளவாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US