கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல்

Bandaranaike International Airport S. Sritharan Tamil nadu India
By Sajithra Jan 10, 2025 09:09 PM GMT
Report

சென்னையில் இடம்பெறவுள்ள  தமிழ்நாடு அரசின் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்றையதினம் சென்னைக்கு செல்வதற்காக சென்றிருந்த வேளை இவ்வாறு தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறீதரன் தரப்பினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அயலக தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக சிறீதரன் அழைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், சிறீதரன் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, சிறீதரனை தடுத்து நிறுத்துமாறு சிஐடியினர் மூலம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தங்களுடைய கடவுச்சீட்டில் பிழை இருக்கின்றது என்றும், அதனால் நீங்கள் பயணிக்க முடியாது என்றும் சிறீதரனிடம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக சிறீதரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையர்களை தடுத்த வைத்த அவுஸ்திரேலியாவுக்கு ஐக்கிய நாடுகள் குழுவின் உத்தரவு

இலங்கையர்களை தடுத்த வைத்த அவுஸ்திரேலியாவுக்கு ஐக்கிய நாடுகள் குழுவின் உத்தரவு

திடீர் நடவடிக்கை 

தனது புதிய கடவுச்சீட்டின் ஊடாக சிறீதரன் எம்.பி இதுவரை நான்கு முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்ததாகவும், இதுவரையில் கடவுச்சீட்டில் பிழை இருப்பதாக அறிவிக்கப்பட்டதில்லை என்றும், தற்போது முதல்முறையாக இவ்வாறு அறிவிக்கப்படுவதால் இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும்  சிறீதரன் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல் | Travel Ban On Mp Sridharan

இதேவேளை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வின் சிறீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள நிலையில், சிறீதரனின் இதுபோன்ற நகர்வுகளை  ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சிலர் இவ்வாறு  தடைகளை ஏற்படுத்தி, இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. 

யாழில் அநுரவின் பெயரில் மோசடி! மதபோதகர் உட்பட இருவர் பொது மக்களிடம் சிக்கினர்

யாழில் அநுரவின் பெயரில் மோசடி! மதபோதகர் உட்பட இருவர் பொது மக்களிடம் சிக்கினர்

உள்ளக பிரச்சினைகள்

இது போன்ற, முறையற்ற நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் உள்ளக பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.  

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல் | Travel Ban On Mp Sridharan  

அத்துடன், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்தும் போது சில கடப்பாடுகள் இருக்கின்றன எனவும், அவை எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

புதிய வாகனம் வாங்கவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! சந்தர்ப்பம் இதுவல்ல..

புதிய வாகனம் வாங்கவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! சந்தர்ப்பம் இதுவல்ல..

GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US