மாகாண அரசின் அதிகாரங்களை மத்திய அரசுக்கு தாரை வார்க்கின்ற செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு
மாகாண அரசின் அதிகாரங்களை மத்திய அரசுக்கு தாரை வார்க்கின்ற செயற்பாட்டில் மன்னார் ஆயர் ஈடுபடுகின்றார் என்று சிவசேன அமைப்பின் சிவதொண்டன் சைவப் புலவர் என்.பி.ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று (29-08-2025) ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கோரிக்கை முன்வைப்பு
அவர் மேலும் குறிப்பிடுகையில், அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த மன்னார் ஆயர் மாவட்டத்தினுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும் கனிய மணல் அகழ்வு, காற்றாலை மின் உற்பத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதுடன், மாவட்ட பொது வைத்தியசாலையினை மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையாக உள்ள மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசுக்கு தாரை வார்க்கின்ற ஒரு செயற்பாட்டை ஆயர் திரை மறைவில் மேற்கொண்டு இருக்கின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்பு
தொடர்ந்து மன்னர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசேன அமைப்பினுடைய சிவ தொண்டன் வி.பஞ்சலிங்கம் குறிப்பிடுகையில், மன்னார் மக்களினுடைய நலன்களை பாதிக்கும் வகையிலே தீர்மானங்களை எடுக்க முடியாது. அவ்வாறு எடுக்கும் சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதாவது இந்த மக்களினுடைய அனுசரனை, ஆலோசனை எதனையும் பெற்றுக் கொள்ளாமல் இவ்வாறான ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது என்பது ஒரு கண்டனத்துக்குரியதாக என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
