வழமைக்குத் திரும்பியுள்ள புகையிரத சேவைகள்
நாட்டில் புகையிரத போக்குவரத்துச் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர (Dhammika Jayasundara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதனை தொடர்ந்து இவ்வாறு புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
மாகாணங்களுக்கு இடையிலான மற்றும் தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான புகையிரத சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு புகையிரத பயணங்களுக்கான நேர சூசிகை தயாரிக்கப்படும்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேலும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
நெரிசலை தவிர்ப்பதற்கு தேவையான வகையில் சேவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.



