தொடருந்தில் மோதுண்டு இரு பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
அம்பலாங்கொடை தொடருந்து பாதையில் பேசிக்கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரும், மாணவர் ஒருவரும் தொடருந்தில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளது .
விபத்தில் காயமடைந்தவர்கள் 17 வயதுடைய அம்பலாங்கொடையில் உள்ள இரண்டு பிரதான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் உடல்நிலை
குறித்த மாணவன் அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், மாணவி அம்பலாங்கொடை தெல்துவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் மாணவன் பலத்த காயமடைந்துள்ளதுடன், மாணவிக்கு கீறல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடருந்து விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவன் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போது சுயநினைவின்றி இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam