தந்தை ஒருவரால் மகளுக்கு நேர்ந்த அவலம்!
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் 13 வயது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு, தப்பிச் செல்ல நபரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமி இன்று காலை காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்றிரவு கொழும்பிற்கு தப்பிச் செல்வதற்காக காத்தான்குடி பேருந்து தரப்பிடத்தில் மறைந்திருந்த போது காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 36 வயதுடையவர் எனவும், அவரின் மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருகின்றமையும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam