கொழும்பு - ஹொரணை வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக இன்று (15) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் (15) வரை ஹொரணை - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இரண்டு மாதங்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளதால், பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹொரணை - கொழும்பு பிரதான வீதி
ஹொரணை - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பொது போக்குவரத்து சேவைகளுக்காக மாத்திரம் திறக்கப்படும் எனவும் ஏனைய வாகனங்கள் மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, இக்காலப்பகுதியில் கொஹுவல சந்தி ஊடாக கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |