கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் பல அடுக்கு வாகன தரிப்பிடங்கள் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பேரிலேயே இந்த வாகன தரிப்பிடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இவற்றில் இரண்டு வாகன தரிப்பிடங்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையினாலும் ஏனைய இரண்டு வாகன தரிப்பிடங்கள் தனியார் நிறுவனத்தினாலும் அமைக்கப்படவுள்ளது.

பொது வாகன தரிப்பிடம்
கொழும்பு - ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்னால், பழைய மீன் சந்தை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் இந்த வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்படும் என கூறப்படுகின்றது.
அத்துடன், கொழும்பு -02 இல் தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்பட்ட பொது வாகன தரிப்பிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

300 வாகனங்களை நிறுத்தும் வசதி
தனியார் நிறுவனமான அக்சஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இந்த வாகனம் தரப்பிடம், சுமார் 1,400 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் தரிப்பிடத்தின் உரிமை 30 வருடங்களுக்குப் பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றப்படும்.
எட்டு அடுக்குகளைக் கொண்ட இந்த வாகனம் தரிப்பிடத்தில் 300 வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது.
ஒப்பந்தத்தின்படி, வாகனம் தரிப்பிடத்தின் மாத வருமானத்தில் 20 சத வீதம் நகர அபிவிருத்தி அதிகார சபை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 22 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri