அரிசி பதுக்கல்கள் குறித்து தகவல்கள்! விலை கொள்கையை மீறுவோருக்கு அபராதம்!
கட்டுப்பாட்டு விலை
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு ஒரு லட்சம் முதல் 5 இலட்சம் ரூபா வரையிலான அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.
அத்துடன் அத்தகைய வர்த்தகர்கள் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் போது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

சோதனைகள்
இதுவரை அரிசியை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளை கண்டுபிடிக்க, சுமார் 70 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், விலையை காட்சிப்படுத்த தவறியதற்காக சுமார் 150 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை 210ஆக அறிவித்து ஜூன் 10ஆம் திகதியன்று சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பதுக்கல்கள்
இதேவேளை மொனராகலை மற்றும் அனுராதபுரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி ஒருதொகையை நேற்றைய தினம் கைப்பற்றியதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய இடங்களிலும் உள்ள ஆலைகளில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திடீரென அதிகரிக்கும் அரிசி விலை! இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி தகவல்
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri