கிராம உத்தியோகத்தர் சங்கத்தினரின் தொழிற்சங்க நடவடிக்கை இடை நிறுத்தம்
கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் கறுப்பு எதிர்ப்புவாரம் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்துவதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதன்படி இன்று(18) நள்ளிரவு முதல் தேர்தல் நிறைவடையும் வரை தடையின்றி தமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தடையின்றி முன்னெடுக்கவுள்ளதாகவும், கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை
கிராம உத்தியோகத்தர்கள், தேர்தல் உத்தியோகத்தர் என்பதால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க இன்று (18) தெரிவித்துள்ளார்.

கிராம அலுவலர் சேவை யாப்பு மற்றும் கிராம அலுவலர் கொடுப்பனவுகளை தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி நாடு முழுவதிலும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் கடந்த மே மாதம் 4ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கினர்.
இந்நிலையில், கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆகஸ்ட் 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கறுப்புப் போராட்ட வாரத்தை ஆரம்பித்திருந்த நிலையில், இன்று(18) நள்ளிரவுடன் போராட்டம் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri