சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்! முல்லைத்தீவை வந்தடைந்த இளைஞர்

Mullaitivu Vavuniya Sri Lanka
By Shan Feb 03, 2026 08:30 AM GMT
Report

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமூக ஒற்றுமை மற்றும் மனிதாபிமான நன்றியை வலியுறுத்தும் நோக்குடன் சக்கர நாற்காலியின் உதவியுடன் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த இளைஞரின் பயணம், இன்றைய தினம் (03.02.2026) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வந்தடைந்துள்ளது.

வவுனியா சூடுவந்தபுலவு பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி என்பவர், கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி காலை மன்னாரில் இருந்து தனது இந்த விசேட சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி! புதிய தலைவராக சாணக்கியன்

பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி! புதிய தலைவராக சாணக்கியன்

இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்

மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக இருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

இலங்கை நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்! முல்லைத்தீவை வந்தடைந்த இளைஞர் | Touring Sri Lanka Wheelchair Young Man Arrived

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டிய அவசியம், குறிப்பாக படித்த மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புகள் இன்றி முடங்கியுள்ள நிலை குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


மேலும், அண்மைக்கால அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகள் மற்றும் புலம்பெயர் உறவுகள் மனிதாபிமான உதவிகளை வழங்கியிருந்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும், அனர்த்த காலங்களில் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி இலங்கை மக்கள் ஒருவருக்கொருவர் உதவியுள்ள ஒற்றுமையையும் சமூக நல்லெண்ணத்தையும் எடுத்துரைக்கும் நோக்கிலும் இந்த பயணம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

5 இலட்சம் புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்கப் போகும் ஐரோப்பிய நாடு..

5 இலட்சம் புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்கப் போகும் ஐரோப்பிய நாடு..

பொதுமக்களின் அன்பு

வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டு வரும் மக்கின் முகமது அலி, கடந்த காலங்களிலும் பல்வேறு சமூக செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.

சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்! முல்லைத்தீவை வந்தடைந்த இளைஞர் | Touring Sri Lanka Wheelchair Young Man Arrived

இந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வந்தடைந்த அவருக்கு அப்பகுதி மக்கள் இன, மத பேதமின்றி தாமாக முன்வந்து அமோக ஆதரவை வழங்கியிருந்ததாகவும், பொதுமக்களின் இந்த அன்பும் ஊக்கமும் தன்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்த அவர், சக்கர நாற்காலி சுற்றுப்பயணம் ஆரம்பித்த இடமான மன்னாரில் இன்னும் ஒரு சில தினங்களில் தனது பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மகிந்தவோடு FCIDக்கு வந்த ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் வெளியேறினார்

மகிந்தவோடு FCIDக்கு வந்த ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் வெளியேறினார்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US