நாடு முடக்கப்படுகின்றதா? இன்று காலை தீர்மானமிக்க கூட்டம்
கோவிட் வைரஸ் பரவுவதை தடுக்க, வார இறுதி நாட்களில், மேலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், கோவிட் நோயை தடுப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவுக்கும் இடையே இன்று காலை மற்றொரு முக்கியமான சந்திப்பு நடைபெற உள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், சுகாதார சேவைகள் இயக்குநர் மற்றும் பல வல்லுநர்கள் பங்கேற்புடன், தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான அடுத்தகட்ட முடிவுகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021, ஆகஸ்ட் 11 அன்று நாடு அதிகபட்சமான, நாளாந்த இறப்புகளைப் பதிவு செய்த பின்னர் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
மருத்துவமனைகளில் தொற்றுக்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சுகாதார வல்லுநர்கள், பல அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் வைரஸின் விரைவான பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு உடனடியாக முடக்கலை விதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.
முன்னதாக, இலங்கை, ராஜரட்டை பல்கலைக்கழக பேராசிரியர் -சுனத் அகம்பொடி, உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டால் அடுத்த 20 நாட்களுக்குள் குறைந்தது 1,200 கூடுதல் இறப்புகளைத் தடுக்க முடியும் என்று கூறிஇருந்தார்.
இந்தநிலையில், முடக்கல் குறித்து, நிபுணர்கள் ஊடகங்களுக்கு அறிக்கைகள் அளித்திருந்தாலும், கோவிட் பணிக்குழுவுக்கு ஒரு முறையான கோரிக்கை கூட செய்யப்படவில்லை என்று இராணுவ தளபதி கூறியுள்ளார்.
எனினும், இன்றைய கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
