முள்ளியவளை சுனாமி நினைவாலயத்தில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்திய உறவுகள்! (Photos)
ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களை புதைத்த இடமான முள்ளியவளை கயட்டையடிப்பகுதியில் அமையப்பெற்ற சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்த மக்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாலை 5.05 மணிக்கு கிராம மற்றும் பொது அமைப்புக்களின் ஒத்துளைப்புடன் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் (K.Vijinthan) தலைமையில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் பொதுச்சுடரினை ஆழிப்பேரலையின் போது மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த தயார் ஏற்ற தொடர்ந்து நினைவிடங்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மக்கள் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
இந்த வணக்க நிகழ்விற்காக முல்லைத்தீவில் இருந்து மக்கள் வருகை தருவதற்காக பேருந்து ஒழுங்குகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்ககள் பிரதிநிதிகள்,பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், அருட்தந்தையர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.








