அதிவேக நெடுஞ்சாலை கட்டண அறவீடு குறித்து வெளியான தகவல்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணம் மீண்டும் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல்(4) அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வாகன சாரதிகள் கட்டணங்களை செலுத்த வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
சூறாவளியின் போது பயணங்களை இலகுவாக்குவதற்காக நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலவச போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டது.
கட்டணம் அறவீடு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளி வட்டச் வீதி, கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது சீரமைக்கப்பட்டு வீதிகள் வழமைக்கு திரும்பியுள்ளமையினால் இலவச அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து வாகனங்களும் தற்போது கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.