இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
இன்று மேல் , சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய இடங்களில் பொதுவான வானிலை நிலவும். மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் இன்று காலை வேளையில் மூடுபனி நிலைமைகளை எதிர்பார்க்கலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கோரப்படுகின்றனர்.
இதேவேளை ஏப்ரல் 05 முதல் 14 வரை இலங்கைக்கு மேல் சூரியனின் உச்சம் நேரடியாக இருக்கும் என்று அறிவிப்பின்படி பொலவட்ட , வாடெனிய, வட்டாரம, அம்பகமுவ, திகன, மஹாவல, கல்கமுவ, அம்பாறை மற்றும் ஒலுவில் ஆகிய இடங்களில் இன்று மதியம் 12:12 மணியளவில் சூரியன் நேரடி உச்சம் கொடுக்கும் என வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri