கொழும்பின் முக்கிய வீதிகள் முடக்கம்! ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் படையெடுப்பு

Colombo SL Protest
By Mayuri Nov 02, 2022 08:03 AM GMT
Report

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் ஜனாதிபதி செயலக வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொழும்பின் முக்கிய பகுதிகளில் வீதித்தடைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சில வீதிகளை முடக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

மேலும், கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அல்லது அதற்கருகில் போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர். 


முதலாம் இணைப்பு

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டத்தை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு முழுவதும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02.11.2022) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

மருதானையில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது.


இந்த போராட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட 15 இற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் இது என்பதுடன், கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், இன்றைய தினம் வேலை நாள் என்ற போதும் கூட கொழும்பில் அதிகளவில் மக்கள் நடமாட்டத்தை காண முடியாத நிலை காணப்படுகிறது. 

கொழும்பின் முக்கிய வீதிகள் முடக்கம்! ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் படையெடுப்பு | Today Massive Protest In Comlombo Novomber 2

இவ்வாறானதொரு சூழலில் போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் சில வேளைகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியங்களும் இருப்பதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர். 

ஜே.வி.பியின் நிலைப்பாடு

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான இன்றைய மக்கள் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஜே.வி.பி அறிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி யாரால் எதற்காக ஏற்பாடு செய்யப்படுகின்றது என்பது தெரியவில்லை என கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாட்டை வெற்றிகொள்ளச் செய்யும் நோக்கில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் முக்கிய வீதிகள் முடக்கம்! ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் படையெடுப்பு | Today Massive Protest In Comlombo Novomber 2

நாட்டில் பல்வேறு வகையிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த போராட்டம் பற்றி தமக்கு எவ்வித புரிதலும் கிடையாது எனவும் இதனால் போராட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை அணி திரட்டி வெற்றிகரமான மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நேற்றைய தினம் ஊடகங்களிடம் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US