வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கடலோரப் பகுதிகளில், மணிக்கு 55-65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், அவ்வப்போது கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.
எதிர்கால முன்னறிவிப்புகள்
சிலாபத்திலிருந்து பொத்துவில் வரை, கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதனால் கடற்படை மற்றும் கடற்தொழிலாளர்கள், இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கவனத்துடன் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவர் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam