ஐ.தே.க தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்கு யாரை நியமிப்பது என்பது இன்னும் தீர்மானிக்கவில்லை! - வஜிர அபேவர்தன
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சியின் பல்வேறு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருவதாகவும் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தாம் தனிப்பட்ட ரீதியில் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இன்னும் கட்சி இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொள்ளும் போது ரணில் விக்ரமசிங்கவே நாடாளுமன்றில் அங்கம் வகிக்க மிகவும் பொருத்தமானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.