கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்துள்ள பாகிஸ்தான் திப்பு சுல்தான் கப்பல்
பாகிஸ்தான் கடற்படைக்கப்பல் PNS திப்பு சுல்தான் நேற்று காலை (18.06.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
நல்லெண்ண விஜயமாக வருகை தந்த இந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றுள்ளனர்.
இந்த கப்பல் 134.1 மீ நீளம் கொண்டதுடன், 168 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகின்றது.

நிகழ்வுகள் ஏற்பாடு
இந்த கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும், நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, PNS திப்பு சுல்தான், ஜூன் 20 ஆம் திகதி நாட்டை விட்டுப்புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri