ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு முன்னிலையான டில்வின் சில்வா
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, நிலக்கரி கொள்முதல் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகியுள்ளார்.
நிலக்கரி கொள்முதல் தொடர்பில் டில்வின் சில்வா தெரிவித்திருந்த ஒரு கருத்து பல்வேறு தரப்பினரதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
நிலக்கரி கொள்முதல்
அதனையடுத்து அவரது கூற்று தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட பல புகார்களைப் பரிசீலித்த பின்னர், அது தொடர்பில் விளக்கமளிக்க நேரில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணையொன்றை டில்வின் சில்வாவுக்கு அனுப்பியிருந்தது.

அதனையடுத்து ஆணைக்குழுவில் நேரில் முன்னிலையான டில்வின் சில்வாவிடம், அவரது கூற்றுடன் தொடர்புடைய விளக்கங்கள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 9 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam