ரில்வின் சில்வா தாக்கப்பட்டாரா! அளிக்கப்பட்டுள்ள விளக்கம்
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தாக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ரில்வின் சில்வா இந்த விடயத்தை இணைய வழி ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கட்சிக் காரியாலயத்தில் வைத்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்த மனநோயாளிகளே இவ்வாறான போலிப் பிரசாரங்களை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சிலர் இரவில் தாங்கள் காணும் கனவுகளை குறித்துக் கொண்டு அதனை பகலில் சமூக ஊடகங்களில் பகிர்வாதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தகவல்களை ஊடகங்கள் வெளியிட முன்னர் கட்சி நிர்வாகத்திடமோ தம்மிடமோ உறுதிப்படுத்தியிருக்க வேண்டுமென அவர் வலியுறத்தியுள்ளார்.
தீய எண்ணங்களைக் கொண்டவர்கள் இவ்வாறான பொய் தகவல்களை பரப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியின் செயற்பாட்டாளர் மிலிந்த ராஜபக்ச எவ்வித உறுதிப்படுத்தல்களும் இன்றி செய்தியாளர் சந்திப்பு நடத்தி பொய் பிரசாரம் மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த மே தினமன்று 21 மாவட்டங்களில் பேரணிகளை நடத்தி மக்கள் விடுதலை முன்னணி உலக சாதனை படைத்துள்ளது என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri