பொலிஸ் மா அதிபர் பதவியில் வெற்றிடம்: கடமைகளை செய்ய மூவர் நியமனம்
இலங்கையில் மூன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களுக்கு பிரதி பொலிஸ் மா அதிபரின் கடமைகளை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விஜேசேகர, பதுளையில் கடமையாற்றும் வெதமுல்ல மற்றும் கொழும்பு தெற்கை சேர்ந்த மாரப்பன ஆகியோருக்கே இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையில் புதிய பொலிஸ் மா அதிபரின் நியமனம் இன்னும் நிரப்பப்படாமையால், பொலிஸ் மா அதிபர் பதவியில் வெற்றிடம் தொடர்கிறது.
நிர்வாக சிக்கல்கள்
ஏற்கனவே மூன்று தடவைகளாக சேவை நீடிப்பை பெற்று வந்த பொலிஸ் மா அதிபர் சிடி விக்கிரமரட்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
எனினும் இதுவரை இலங்கையின் ஜனாதிபதி இது தொடர்பில் எவ்வித தீர்மானங்களையும் அறிவிக்கவில்லை.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கான நியமனங்களை மேற்கொள்வதில் ஏற்பட்ட நிர்வாக சிக்கல்களே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
