இந்தியாவில் சட்டவிரோதமாக மறைந்திருந்த மூன்று இலங்கையர்கள் கைது
இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகள், பெங்களூர் - தேவனஹள்ளி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த மூவரும் இலங்கையில் பல குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பல மாதங்களாக பெங்களூர் பகுதியில் தலைமறைவாக இருந்ததாகவும் அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த மூவரும் கொழும்பு, ரத்னமலானையை சேர்ந்த வித்யாநாகம்கே இரேஷ் ஹன்சகா ஜெயார்த்தனே, (31), கொட்டாஞ்சேனையை சேர்ந்த பதிரானகே சுகத் சமீந்து, (46), மாத்தறை டோண்ட்ராவைச் சேர்ந்த ஜெயசாரியா முதலிகே திலீப் ஹரிஷன், (29)ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மற்றும் கோயம்புத்தூர்
விசாரணையில், மூவரும் 2024 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் (தமிழ்நாடு) வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பெங்களூருவுக்குச் செல்வதற்கு முன்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சிறிது காலம் தங்கியிருந்ததாக விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் கடவுச்சீட்டு உள்ளிட்ட செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த மூவரில் வித்யாநாகங்கே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படுபவர் என்றும், ஜெயசிங்கிள் மீது இலங்கையில் கொலை மற்றும் பிற குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
