மாகாண ஆளுநர்களாக இரு தமிழர்கள் நியமிக்கப்படலாம்
வடக்கு - கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக இரண்டு தமிழர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக மகிந்த யாபா அபேவர்தன ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளுநர்களை பதவி நீக்கிய ஜனாதிபதி
அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களை பதவி நீக்கியிருந்தார்.
இந்த பதவி வெற்றிடங்களுக்காக முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் சிரேஸ்ட அரசியல்வாதியும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லக்ஸ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.