யாழில் மூவர் மீது வாள்வெட்டு : ஒருவர் வைத்தியசாலையில்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி அம்பன் பகுதியில் நேற்றுமுன்தினம்(21) இரவு இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் காயம காயமடைந்துள்ளனர்.
இதில் ஒருவர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் அவர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துளளனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அம்பன் பகுதியிலிருந்து தமது குடத்தனையிலுள்ள வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது குறித்த நபரை வழிமறித்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த வாளால் வெட்டிய நபர் வாள் வெட்டிற்கு உள்ளானவர்களது வீட்டிற்கு அத்துமீறி சென்று கதவுகள் மற்றும் வீட்டின் யன்னல்களையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், பல்வேறு வழக்குகளில் பிணையில் உள்ளவர் என்றும் மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
