மாதம்பே பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து - மூவர் பலி
மாதம்பே பகுதியில் சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி பேருந்து மற்றும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தலவில தேவஸ்தானத்திற்குச் சென்று மீண்டும் வந்துக்கொண்டிருந்த போதே, முச்சக்கர வண்டி இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
மேலதிக விசாரணை
மீன்களை ஏற்றிச் சென்ற லொறியுடனும், பின்னர் பேருந்து ஒன்றுடனும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
விபத்துக்குப் பிறகு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்துடன் தொடர்புடைய மீன் லொறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 22 மணி நேரம் முன்

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
