மன்னார் கடற்பரப்பில் பெருந்தொகையான பீடி இலைகளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கைது
இலங்கை எல்லைக் கடற்பரப்பான மன்னார் தெற்கே, வடமேற்கு கடற்பகுதியின் குதிரைமலை முனையில் இலங்கை கடற்படையினரினால் நேற்று(12) இரவு முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் களின் படகில் 80 உறைகளில் சுமார் 2689 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மூவரும் பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை கற்பிட்டி விஜய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் வடமேல் மாகாண மதுவரித் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் மூவரையும் இன்று(13) புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வருடம் இதுவரையிலும் 37, 619 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |