வெசாக் தினத்தில் சட்டவிரோதமாக ஏற்றி வரப்பட்ட மாட்டுடன் மூவர் கைது..!
முச்சக்கரவண்டி ஒன்றில் வெசாக் பெளர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக ஏற்றி வரப்பட்ட மாடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(31.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹட்டன் - கொழும்பு பழைய வீதியில் உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக மாடு ஒன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், கடமையில் ஈடுபட்டிருந்த ஹட்டன் ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸார் முச்சக்கரவண்டினை வழிமறித்து சோதனையிட்ட போதே குறித்த மாடு மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேக நபர் மூவரையும் மிருகவதை சட்டத்தின் கீழ், பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், மாடு மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மன்றில் பாரப்படுத்தப்படவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

