அனுமதியின்றி காடுகளை வெட்டிய மூவர் கைது (Photos)
மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அனுமதி இல்லாமல் காடுகளை வெட்டிய குற்றச்சாட்டின் பெயரில் மூன்று சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேப்பங்குளம் பகுதியில் இன்று (12) கிரவல் வெட்டுவதற்காக காடுகளை வெட்டி துப்புரவு செய்யும் போது கிராம உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த இடத்துக்கு விசேட பொலிஸ் அதிரடி படையினர் வருகை தந்து காடுகளை வெட்டிக் கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மொரவெவ -10ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையின் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.










தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
