தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களே அதிகளவில் உயிரிழக்கின்றனர் – சுகாதார அமைச்சு
கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களே அதிகளவில் உயிரிழப்பதாகவும்; அதிகளவில் நோய்த் தொற்றுக்கு இலக்காவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட் மூன்றாம் அலையின் முடிவினை காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய்த் தொற்றாளிகள் குறைவடைந்ததாகவும் அண்மைய நாட்களில் மீளவும் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வாரங்களில் பதிவான மரணங்கள் தொடர்பில் ஆராய்ந்த போது கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களே அதிகளவில் மரணித்துள்ளதுடன் நோய்த் தொற்றுக்கும் இலக்காகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து முதியவர்களும் எந்த தடுப்பூசி என வகைப் பிரிக்காது கிடைக்கும் தடுப்பூசியை உடன் போட்டுக் கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri