இந்த மாதம் மிகவும் ஆபத்தானது! - இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ள நிலையில், இந்த மாதம் மிகவும் ஆபத்தான மாதம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கையில் நாளாந்தம் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகை 30 வீதத்தினால் உயர்ந்துள்ளதாகவும், கோவிட் இறப்புகள் 48.8 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாடு ஆபத்தில் இருப்பதால் மக்கள் ஆபத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவசர தேவையைத் தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த மாதம் மிகவும் ஆபத்தானது என்றும், கோவிட் கட்டுப்படுத்தலுக்கான ஒரே தீர்வு நோய் பரவாமல் தடுப்பதே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், "உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan